Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நன்மை

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நன்மை

13 ஐப்பசி 2025 திங்கள் 17:52 | பார்வைகள் : 204


இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்த காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களின் அளவு 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 140.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் பெறப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் இதுவரை வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் மூலம் இலங்கைக்கு பெறப்பட்ட வருமானம் 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களின் அளவு 4,843.8 மில்லியன் டொலர்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களின் அளவு 967.9 மில்லியன் டொலர்களாக வளர்ச்சியடைந்துள்ளது.

மேலும், செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 182.9 மில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டின் தொடக்கம் முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரை சுற்றுலா வருமானமாக 738.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்