Paristamil Navigation Paristamil advert login

இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய Komaki Electric

இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய Komaki Electric

13 ஐப்பசி 2025 திங்கள் 12:15 | பார்வைகள் : 428


கோமாகி நிறுவனம் இரண்டு புதிய மின்சார வாகன மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சார வாகனத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் கோமாகி எலெக்ட்ரிக் (Komaki Electric), புதிய FAM 1.0 மற்றும் FAM 2.0 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

FAM 1.0 ரூ.99,999 மற்றும் FAM 2.0 ரூ.1,26,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

குடும்ப பயணத்திற்கும், வணிக தேவைகளுக்கும் ஏற்ற வகையில் இந்த 3 சக்கர மின்சார ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

FAM 1.0 மொடல் முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டருக்கு மேல், FAM 2.0 மொடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கக்கூடியவை(Range).  

இவை நீண்ட ஆயுள் கொண்ட Lipo4 பேட்டரிகளால் இயக்கப்படுகின்றன. 3000 முதல் 5000 சார்ஜ் சைக்கிள்கள் வரை நீடிக்கும் இந்த பேட்டரிகள், அதிக சூடாகாமல், தீவிபத்து அபாயங்களைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தன்மையைக் கொண்டுள்ளன.

இந்த ஸ்கூட்டரில் உள்ள பல்வேறு சென்சார்கள், வேகமும் பேட்டரி நிலையும் கண்காணிக்கின்றன. சுய பரிசோதனை வசதி மூலம், வாகனத்தில் ஏற்படும் சிக்கல்களை முன்கூட்டியே எச்சரிக்கிறது.

Reverse assist, auto hold special brake, ஸ்மார்ட் டாஷ்போர்டு போன்ற தொழில்நுட்பங்கள் பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன.

80 லிட்டர் பூட் ஸ்பேஸ், முன்புற கூடை, metallic body, LED DRL, ஹேண்ட் பிரேக், கால்பிரேக் ஆகியவை குடும்ப பயணத்திற்கு சிறந்த தேர்வாக FAM மொடல்களை மாற்றுகின்றன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்