இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் தெரியுமா?

10 ஐப்பசி 2025 வெள்ளி 16:13 | பார்வைகள் : 227
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில் திவாகர், கம்ருதீன், சபரி, பிரவீன் காந்தி, விக்கல்ஸ் விக்ரம், பிரவீன் ராஜ், கலையரசன், எஃப் ஜே, கானா வினோத், துஷார் என மொத்தம் 10 ஆண் போட்டியாளர்களும், கனி, சுபி, பார்வதி, வியானா, நந்தினி, கெமி, அரோரா, ஆதிரை, ரம்யா ஜோ என 9 பெண் போட்டியாளர்களும், அப்சரா என்கிற திருநங்கையும் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி, ஒவ்வொரு வாரம் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், தாங்கள் வெளியேற்ற நினைக்கும் இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் நேரடியாக நாமினேஷனில் இடம்பெறுவர். அவ்வாறு நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் யாரை எலிமினேட் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்கள் தான். அவர்கள் ஆன்லைன் மூலமாக வாக்களித்து எந்த போட்டியாளரை காப்பாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். மக்கள் அளிக்கும் வாக்குகளில் குறைவான ஓட்டுக்களை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் வார நாமினேஷனில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், ஆதிரை, வியானா, பிரவீன் ராஜ், அப்சரா, கலையரசன், பிரவீன் காந்தி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் முதல் வாரம் வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் தான் எலிமினேட் ஆவார் என சில தினங்களுக்கு முன்னர் பலரும் கூறி வந்தனர். ஆனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அவரையே டார்கெட் செய்து வருவதால், மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவருக்கு அனுதாபம் அதிகமாகி, வாக்குகளை அள்ளிவீசி வருகின்றனர். இதனால் இந்த வாரம் அதிக வாக்குகள் வாங்கி முதலிடத்தில் உள்ளார் திவாகர். அதனால் அவர் எலிமினேட் ஆக வாய்ப்பே இல்லை.
திவாகருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்றிருக்கும் போட்டியாளர்கள் என்றால் அது ஆதிரை மற்றும் வியானா தான். இவர்களை தொடர்ந்து பிரவீன் ராஜ் மற்றும் அப்சரா ஆகியோருக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருக்கும் இரண்டு போட்டியாளர்கள் என்றால் அது கலையரசன் மற்றும் இயக்குனர் பிரவீன் காந்தி தான். இவர்கள் இருவரில் பிரவீன் காந்திக்கு தான் கம்மியான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக எலிமினேட் ஆகும் போட்டியாளராக பிரவீன் காந்தி இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.