2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா கொரினா மச்சாடோ
10 ஐப்பசி 2025 வெள்ளி 14:58 | பார்வைகள் : 2619
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad) வென்றுள்ளார். இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார்.
1967-ம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்துள்ளார். அந்த நாட்டில் சர்வாதிகாரம் மாறி ஜனநாயகம் மலர இவர் முக்கிய காரணம்.
ஜனநாயகப் போராட்டங்களின் போது, இவர் பல நாள்கள் மறைந்து வாழ்வதாக இருந்தது. இவரது உயிருக்கு மிகுந்த ஆபத்து இருந்தாலும், அவர் தொடர்ந்து வெனிசுலாவிலேயே இருந்து, ஜனநாயகத்திற்காகப் போராடி வந்தார்.
இவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, போராட்டத்தை அமைதி முறையில் நடத்தி வெற்றியும் கண்டுள்ளார்.
இவருக்கு இந்தப் பரிசு வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை.
இந்தப் பரிசுக்கான பரிந்துரைகள் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் சென்றிருக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் எந்தெந்தப் போரை நிறுத்தியதாகக் கூறுகிறாரோ, அவைப் பெரும்பாலும் ஜனவரிக்குப் பின்னரே நடந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan