கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலங்கையர்களை ஏமாற்றிய நபர்

10 ஐப்பசி 2025 வெள்ளி 13:58 | பார்வைகள் : 203
கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் பணியகத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் சிங்ஹாரகே ஜனக சில்வா என்ற நபர் ஆவார்.
இவர் நிரந்தர வதிவிடத்திற்காக கனடாவில் குடியுரிமை பெற்றவர்.
சந்தேக நபர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பலரிடமிருந்து மோசடியாக பணம் பெற்றுள்ளார்.
இவரது மோசடிக்கு பலியான பத்து பேர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
அதன்படி, பணியகம் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து, சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர் நேற்று பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பிற்காக பணம் மோசடி செய்தல் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (10) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.