இலங்கை முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை - பலர் கைது

10 ஐப்பசி 2025 வெள்ளி 11:48 | பார்வைகள் : 800
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது 29 ஆயிரத்து 243 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகத்தின் அடிப்படையில், 769 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குற்றங்களுடன் தொடர்புடைய 26 பேர் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 272 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட173 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 28 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், ஏனைய போக்குவரத்து குற்றங்களுக்காக 4 ஆயிரத்து 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது