Paristamil Navigation Paristamil advert login

‘ஜனநாயகன்’ படத்தில் கரூர் சம்பவ காட்சிகள் வருகிறதா?

 ‘ஜனநாயகன்’ படத்தில் கரூர் சம்பவ காட்சிகள் வருகிறதா?

9 ஐப்பசி 2025 வியாழன் 15:49 | பார்வைகள் : 197


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவின் சில காட்சிகள், அவரது அடுத்த படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இணைக்கப்பட இருப்பதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், படக்குழுவினரிடமிருந்து வந்த தகவலின்படி, ‘ஜனநாயகன்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என்றும், கிட்டத்தட்ட எடிட்டிங் பணிகளும் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். 

இனி எந்தக் காட்சிகளையும் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும், கரூர் காட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே, கரூரில் நடந்த கூட்டம் குறித்த காட்சிகள் எதுவும் ‘ஜனநாயகன்’ படத்தில் இருக்காது என்றே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்