அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி
9 ஐப்பசி 2025 வியாழன் 13:44 | பார்வைகள் : 548
அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்த பின்னர் துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan