யூபிஐ செயலியில் PIN இல்லாமலே பணம் அனுப்பலாம்
9 ஐப்பசி 2025 வியாழன் 11:44 | பார்வைகள் : 723
இந்தியாவில் நாளுக்கு நாள் UPI பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. பெட்டிக்கடைகள் தொடங்கி, வணிக வளாகங்கள் வரையில் மக்கள் UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
Google pay, PhonePe, Paytm போன்ற செயலிகள் மூலம் QR Code ஸ்கேன் செய்து, நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். இதில் பணம் அனுப்புவதற்கு PIN உள்ளிட்ட வேண்டும்.
தற்போது UPI பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் புதிய விதி ஒன்றை NPCI அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, இனி பணம் அனுப்ப PIN உள்ளிடுவதற்கு பதிலாக இனி கை ரேகை மற்றும் முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரங்களை பயன்படுத்தி, UPI செயலிகள் மூலம் பணம் அனுப்ப முடியும்.
இதற்கான அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதாரில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும்.
PIN மூலம் நிதி மோசடிகள், PIN திருடப்படுவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்த நிலையில், கை ரேகை மற்றும் முக அங்கீகாரம் போன்றவற்றை நகலெடுக்கவோ திருடவோ முடியாது என்பதால் பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த புதிய நடைமுறை 9 அக்டோபர் முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan