Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

இலங்கையில் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

8 ஐப்பசி 2025 புதன் 11:51 | பார்வைகள் : 182


வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் ஸ்பொட் தங்கத்தின் விலை 4,011.18 டொலராக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 6,000 ரூபாய் அதிகரித்துள்ளதை சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.

அதன்படி, நேற்று ரூ.290,500 ஆக இருந்த 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ரூ.296,000 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று ரூ.314,000 ஆக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ரூ.320,000 ஆக அதிகரித்துள்ளது.

உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோ பரிமாற்றமான 1 பிட்கொயினின் பெறுமதி முதல் முறையாக 125,000 டொலரைத் தாண்டியது.

தங்கத்தின் விலை தற்போது 1970 காலப்பகுதிக்கு பின்னர் தற்போது மிக வேகமான வளர்ச்சியைக் குறிக்கிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்