766 கிலோ எடை பூசணிக்காயால் சூரிச் விவசாயி சாதனை

7 ஐப்பசி 2025 செவ்வாய் 14:28 | பார்வைகள் : 112
சுவிட்சர்லாந்தின் 766 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய பூசணிக்காயை விளைவித்து, சூரிச் விவசாயி ஃப்ளோரியன் இஸ்லர் சாதனை படைத்துள்ளார் .
சனிக்கிழமை சென் காலனில் உள்ள ஜோனாவில் நடந்த ஸ்குவாஷ் வகையுடன் சுவிஸ் பூசணிக்காய் எடை சாம்பியன்ஷிப் போட்டியில், 766 கிலோ எடை பூசணிக்காயை காட்சிப்படுத்தி அவர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
அதேவேளை கடந்த வருடம் , இஸ்லர் 727.5 கிலோ எடையுடன் ஒரு பூசணிக்காயை விளைவித்து சாதனை படைத்திருந்தார்.
728.5 கிலோ எடையுள்ள ஒரு பூசணிக்காய், இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பெர்னில் உள்ள கோனோல்ஃபிங்கனைச் சேர்ந்த செர்ஜியோ லிமா டோரஸ், 485.5 கிலோ எடையுள்ள பூசணிக்காயை விளைவித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
சுவிஸ் பூசணிக்காய் மற்றும் காய்கறி எடை சாம்பியன்ஷிப் 12வது முறையாக நடைபெற்றது. அதேவேளை கின்னஸ் உலக சாதனைகளின்படி, இதுவரை வளர்க்கப்பட்ட மிகப்பெரிய பூசணிக்காயின் எடை 1247 கிலோ எடை ஆகும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1