Paristamil Navigation Paristamil advert login

காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் அவசியமில்லை - ட்ரம்ப் திட்டவட்டம்

காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் அவசியமில்லை - ட்ரம்ப் திட்டவட்டம்

7 ஐப்பசி 2025 செவ்வாய் 13:28 | பார்வைகள் : 182


காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில் , காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். திட்டம் அமுலுக்கு வந்தால் மத்திய கிழக்கில் முதல் முறையாக அமைதி நிலவும். பணயக்கைதிகளை உடனடியாக மீட்போம்.

இப்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அநேகமாக இரண்டு நாட்கள் ஆகும்.

இது, முழு அரபு உலகத்திற்கும், இஸ்லாமிய உலகத்திற்கும் ஒரு பெரிய விடயம். இவ்வாறு அவர் கூறினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்