மகளிர் உலகக்கிண்ணம்: அதிரடி சதம் விளாசிய வீராங்கனை..நியூசிலாந்தை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா

7 ஐப்பசி 2025 செவ்வாய் 11:28 | பார்வைகள் : 113
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக்கிண்ணப் போட்டி இந்தூரில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து 231 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அணித்தலைவர் சோபி டிவைன் (Sophie Devine) 98 பந்துகளில் 85 ஓட்டங்கள் எடுத்தார். ப்ரூக் ஹாலிடே 37 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில், அதிரடியில் மிரட்டிய டஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits) 89 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசினார்.
நிதானமாக நின்று ஆடிய சுனே லூஸ் (Sune Luus) ஆட்டமிழக்காமல் 83 (114) ஓட்டங்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 40.5 ஓவரில் 234 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1