குகேஷின் ராஜாவை தூக்கி வீசிய அமெரிக்க வீரர்

7 ஐப்பசி 2025 செவ்வாய் 11:28 | பார்வைகள் : 115
இந்திய வீரர் குகேஷை வீழ்த்தியதும் அவரது ராஜாவை அமெரிக்க வீரர் தூக்கி வீசிய சம்பவம் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான Checkmate செஸ் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், இந்தியாவை 5-0 என்ற கணக்கில் அமெரிக்கா வீழ்த்தியது. இதில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகேசி, திவ்யா தேஷ்முக், குகேஷ் உள்ளிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர்.
இதில் குகேஷ் மற்றும் அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராக்கு இடையேயான போட்டியில், குகேஷை வீழ்த்திய நகமுரா குகேஷின் ராஜாவை தூக்கி பார்வையாளர்களை நோக்கி வீசுவார்.
நகமுராவின் இந்த செயலை அவரின் சக வீரர்கள் ஆதரித்தனர். மேலும், தோல்வியடைந்த குகேஷுக்கு இந்திய வீரர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.
நகமுராவின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. முன்னாள் உலக சாம்பியனான விளாடிமிர் கிராம்னிக், நகமுராவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதேவேளையில், Gotham Chess என்ற பெயரில் உள்ள பிரபல செஸ் ஸ்ட்ரீமரான Levy Rozman, இது ஒரு நாடகம் என விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "இது நகமுராவின் திட்டம் இல்லை. பார்வையாளர்களை உற்சாகப்படுத்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் வெற்றி பெற்றதும் குகேஷின் ராஜாவை தூக்கி வீசுமாறு கூறினர்.
சாகர் ஷாவுக்கு எதிரான எனது ஆட்டத்தில் நான் வென்றாலோ அல்லது அவர் வென்றாலோ, நாங்கள் ராஜாவை உடைக்க வேண்டும் என்பதை நான் மறந்துவிட்டேன்.
அதே போல் குகேஷ் மற்றும் நகமுராவிற்கு இடையேயான போட்டியில், வெற்றி பெற்றால் ராஜாவை பார்வையாளர்களிடையே தூக்கி வீச வேண்டும். குகேஷ் அதை செய்திருப்பாரா என தெரியாது.
ஆனால் போட்டி முடிந்த பின்னர் நகமுரா, குகேஷிடம் இதில் எந்த அவமரியாதையும் இல்லை. இது எல்லாம் காட்சிக்காகவே என விளக்கினார் என்று தெரிவித்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1