Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் பீர்க்கு தட்டுப்பாடு...

ஜப்பானில் பீர்க்கு தட்டுப்பாடு...

6 ஐப்பசி 2025 திங்கள் 12:16 | பார்வைகள் : 219


ஜப்பானின் மிகப்பெரிய மதுபான உற்பத்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் நாடு முழுவதும் பீர்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சைபர் தாக்குதலால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஐந்து நாட்களாக  முடங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

அந்நிறுவனத்தின் மென்பொருள் தொழில்நுட்பத்தில் கடந்த திங்கட்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் பொருட்கள் தயாரிப்பு, பதப்படுத்துதல், ஏற்றுமதி உட்பட அனைத்துவித செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நிறுவன செயற்பாடுகளை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்