Paristamil Navigation Paristamil advert login

300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட தங்க நாணயங்கள்

300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட தங்க நாணயங்கள்

6 ஐப்பசி 2025 திங்கள் 07:16 | பார்வைகள் : 140


அமெரிக்காவில் 300 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புளோரிடா கடற்கடையில், 1715-ஆம் ஆண்டில் புயலில் சிக்கி மூழ்கிய ஸ்பானிஷ் கப்பல்களில் ஒன்றிலிருந்து, சுமார் 1 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கப்பல், ஸ்பெயினுக்கு திரும்பும்போது'New World' செல்வங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.


ஆனால், ஜூலை 31, 1715 ஆண்டு ஏற்பட்ட கடும் புயலில் சுமார் 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள நகைகள், தங்கம் மற்றும் வெள்ளி கடலில் மூழ்கியது.

இந்த அதிசய கண்டுபிடிப்பை "1715 Fleet - Queens Jewels LLC" என்ற கப்பல் நிறுவனம் மேற்கொண்டது.


கேப்டன் லேவின் ஷேவர்ஸ் தலைமையிலான குழு, Reales எனப்படும் 1000 வெள்ளி நாணயங்கள் மற்றும் Escudos எனப்படும் 5 தங்க நாணயங்களை மீட்டுள்ளனர். மேலும் சில அரிய தங்க பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயங்கள் மெக்ஸிகோ, பெரு மற்றும் பொலிவியா போன்ற ஸ்பானிஷ் காலனிகளில் உருவாக்கப்பட்டவை.

"இந்த நாணயங்கள் வெறும் செல்வம் அல்ல, அவை வரலாற்றின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு நாணயமும் ஸ்பானிஷ் பேரரசின் பொற்காலத்தில் வாழ்ந்த மக்களின் நினைவாக இருக்கிறது" என கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் சால் குத்துசோ கூறியுள்ளார்.

மீட்கப்பட்ட செல்வங்கள் புளோரிடா மாநில சட்டப்படி, மீட்பு நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு ஆகியோருக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்