Paristamil Navigation Paristamil advert login

இவங்கை முழுவதும் பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு - 971 பேர் கைது

இவங்கை முழுவதும் பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு - 971 பேர் கைது

4 ஐப்பசி 2025 சனி 19:50 | பார்வைகள் : 140


 

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுவை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாளாந்த பொலிஸ் சுற்றிவளைப்புகள் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளைச் சேர்ந்த 6,644 பேர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 27,727 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர், 10,900 வாகனங்கள் மற்றும் 8,385 மோட்டார் சைக்கிள்களும் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனைகளின் போது, ​​போதைப்பொருள் தொடர்பாக 971 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல்வேறு குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 21 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குற்றங்களை ஒழிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முப்படையினரால் இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்