பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2
4 ஐப்பசி 2025 சனி 17:31 | பார்வைகள் : 2605
பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு அறிமுகம் ஆன கும்கி படம், 2012ல் வெளியாகி வெற்றியை பெற்றது. தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளியது. அடுத்தாக சில ஆண்டுகள் கழித்து கும்கி 2வை தொடங்கினார் பிரபு சாலமன். அதில் விக்ரம் பிரபு, முதற்பாகத்தில் நடித்தவர்கள் நடிக்கவில்லை. புதுமுகம் மதி ஹீரோ. அர்ஜூன் தாஸ் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால், கொரோனா, பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் பல ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டது.
பிரபுசாலமனும் ஒரு கட்டத்திற்குமேல் அந்த படத்தை மறந்துவிட்டு அடுத்த படங்களுக்கு சென்றுவிட்டார். இப்போது விஜயகுமார் பேரனும், வனிதா மகனுமான ஸ்ரீஹரியை வைத்து மாம்போ என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். அது, சிங்கம் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துாசிதட்டி எடுத்து கும்கி 2 படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. ஹீரோவாக நடித்த மதி, இயக்குனர் லிங்குசாமியின் உறவினர். கும்கியை தயாரித்தது லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கும்கி 2வுக்கு இமான் இசையமைக்கவில்லை, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan