Paristamil Navigation Paristamil advert login

சைவ ஈரல் கிரேவி

சைவ ஈரல் கிரேவி

4 ஐப்பசி 2025 சனி 16:31 | பார்வைகள் : 127


புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்து மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து சைவம் உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள். இதில் அசைவ சுவையில் சைவ ஈரல் கிரேவி செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அசத்தலா இருக்கும்.

தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு, பச்சைமிளகாய், சீரகம், உப்பு, மிளகு, எண்ணெய், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சோம்பு, சீரகம், அன்னாச்சி பூ, கருவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்.

செய்முறை :-பாசிப்பருப்பை 6 மணி நோரத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டும். ஊற்றி வைத்த பாசிப்பருப்பை மிக்ஸியில் போட்டு பச்சைமிளகாய், சீரகம், உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதன்பின் அரைத்து எடுத்தை இட்லி தட்டில் ஊற்றி இட்லி போட்டு 15 நிமிடம் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சோம்பு, சீரகம், அன்னாச்சி பூ, கருவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்.

இதன்பின் தக்காளி, அவித்து வைத்த பாசிப்பருப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு ஆகியவை சேர்த்தபின் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேகவைத்து விட்டு மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து எடுத்தால் கமகமன்னு தரமான சைவ ஈரல் கிரேவி ரெடியாகி விடும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்