Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி வீடு பற்றிய புதிய தகவல்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி வீடு பற்றிய புதிய தகவல்!

4 ஐப்பசி 2025 சனி 16:31 | பார்வைகள் : 170


பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி அக்டோபர் 5-ந் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி வந்தாலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த சீசனிலும் ஏராளாமன போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனர். அவர்கள் யார்... யார் என்பதை இறுதி வரை சீக்ரெட்டாகவே வைத்திருக்கிறார்கள். இந்த சீசனில், 18 போட்டியாளர்கள் நாளை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்களாம். போட்டியாளர் யார்... யார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் ரசிகர்கள், பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பதை பார்க்கவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அவர்களுக்காக ஒரு சுட சுட அப்டேட் வந்துள்ளது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்பேஸ் தீமில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிச்சன், லிவ்விங் ஏரியா, பெட்ரூம் கன்பெஷன் ரூம் என அனைத்தும் ஹை டெக் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய சீசன்களில் இல்லாத வசதிகள் கூட இந்த சீசனில் உள்ளதாம். போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன் விஜய் சேதுபதி உள்ளே சென்று என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை பார்வையிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் வீட்டையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பார்வையிட்டுள்ளார்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புது பிக் பாஸ் வீட்டில் பெட்ரூமிற்கு அருகிலேயே ஜக்குஸியும் அமைந்துள்ளது. ஜக்குஸி என்றால் பாத் டப் தான். திறந்த வெளியில் அந்த பாத் டப் அமைந்துள்ளது. பெட்ரூம் அருகிலேயே பாத் டப் கொடுக்கப்பட்டு உள்ளதால், அதில் என்னென்ன கூத்து நடக்கப் போகிறதோ என நெட்டிசன்கள் தற்போதே விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். விஜய் சேதுபதியே அந்த ஜக்குஸியை பார்த்து, இதெல்லாம் இருக்கா என ஆச்சர்யத்துடன் கேட்கும் வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் வீடு ஸ்பேஸ் தீமில் வடிவமைக்கப்பட்டு உள்ளதால், இந்தமுறை கிச்சனும் செம மாடர்ன் ஆக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஹைடெக்கான கன்பெஷன் ரூம், பிரம்மிக்க வைக்கும் லிவ்விங் ஏரியா என பிரம்மாண்டத்தின் உச்சமாக இந்த பிக் பாஸ் சீசன் 9 வீடு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த முறை வீட்டில் மட்டுமின்றி ரூல்ஸிலும் சிலவற்றை மாற்றி இருக்கிறார்களாம். அது என்னென்ன என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும். நாளை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதால் அடுத்த நான்கு மாதத்திற்கு ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்