அனைத்து புனிதர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பாடசாலை விடுமுறை நாட்களை மறுபெயரிட ஆசிரியர் சங்கம் முன்மொழிவு!!

3 ஐப்பசி 2025 வெள்ளி 17:28 | பார்வைகள் : 495
பாடசாலை விடுமுறைகளின் பெயர்களிலிருந்து "அனைத்து புனிதர்களின் தினம்" (Toussaint) மற்றும் "கிறிஸ்துமஸ்" என்பவற்றை நீக்க வேண்டும் என்று FSU-SNUipp என்ற ஆசிரியர் சங்கம் பரிந்துரைத்தது.
இதன் மூலம் "அனைத்து புனிதர்களின் தினம்" என்பதற்கு "இலையுதிர் விடுமுறை" என்றும், "கிறிஸ்துமஸ் விடுமுறை" என்பதற்கு "குளிர்கால விடுமுறை" என்றும் மாற்றப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை கல்வி மேலான்மை ஆணையத்தில் பெரும்பான்மையுடன் ஏற்கப்பட்டாலும், கல்வி அமைச்சகம் அதை நிராகரித்துள்ளது.
இந்த மாற்றம் பள்ளி ஆவணங்களில் மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டும் என சங்கம் கூறுகிறது. ஆனால், இது வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி அரசியல் வட்டாரங்களில் சர்சையாக மாறியுள்ளது. சிலர் கிறிஸ்தவ அடையாளங்களை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இந்த மாற்றத்தை எதிர்த்துள்ளனர். எனவே, அரசாங்கம் இந்த பரிந்துரையை பின்பற்றாமல் விட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1