Paristamil Navigation Paristamil advert login

ILT20 தொடரில் ஏலம் போகாத அஸ்வின் - இதுதான் காரணமா..?

ILT20 தொடரில் ஏலம் போகாத அஸ்வின் - இதுதான் காரணமா..?

3 ஐப்பசி 2025 வெள்ளி 13:28 | பார்வைகள் : 191


ILT20 தொடர் ஏலத்தில் எந்த அணியும் அஸ்வினை வாங்கவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வந்தார்.

ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்த அவர், அதன் பின்னர் வெளிநாட்டு T20 லீக்களில் விளையாட ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்.

அதன்படி, அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பிக்பாஸ்(Big Bash)T20 லீக் தொடரில், சிட்னி தண்டர் அணியில் இணைந்துள்ளார்.

15வது BBL தொடர் வரும் டிசம்பர் 14 ஆம் திகதி தொடங்கி, ஜனவரி 26 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

அதே போல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ILT20 தொடர் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

2026 ILT20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில், எந்த அணியும் அவரை வாங்கவில்லை என்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏலத்தில் தனது அடிப்படை விலையாக, 1,20,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.06 கோடி) நிர்ணயம் செய்திருந்தார் அஷ்வின்.

இது ILT20 தொடர் ஏலத்தில் ஒரு வீரரின் அதிகபட்சமான அடிப்படை விலை ஆகும். இதன் காரணமாகவே அவரை ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை என கூறப்படுகிறது.

அதேவேளையில், வைல்டு கார்டு வகையில் அவரை எந்த அணியாவது வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்