கிரீன் டீ தொடர்பில் ஆராய்ச்சியில் புதிய தகவல்!

3 ஐப்பசி 2025 வெள்ளி 11:43 | பார்வைகள் : 486
உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களுக்கு வழக்கமான மருந்துகள், அறுவை சிகிச்சைகள் அதிக செலவானவையும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தக்கூடியவையும் இருக்கும் நிலையில், அதற்கான மாற்றாக கிரீன் டீ பல்வேறு நன்மைகளை கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பருமன் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வளர்சிதை மாற்ற நோய்கள் உலகம் முழுக்க அதிகரித்து வரும் நிலையில், இயற்கையான உணவுப் பொருட்களின் மருத்துவ குணத்தை வெளிக்கொணரும் வகையிலான புதிய ஆராய்ச்சி ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. செல் பயோகெமிஸ்ட்ரி & பங்க்ஷன் என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கிரீன் டீ சாறு பருமனான எலிகளில் எடையை கணிசமாகக் குறைத்ததோடு, குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் திறனும் கொண்டதாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின் படி, உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, டைப் 2 நீரிழிவு, இதய நோய், கொழுப்பு கல்லீரல் நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு வளர்சிதை மாற்ற குறைபாடுகள் போன்றவை வேகமாக அதிகரித்து வருகின்றன. பருமன் மற்றும் அதனைச் சார்ந்த நோய்களுக்கு மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு வழக்கமான சிகிச்சைகளுக்கே அதிக செலவது மட்டுமல்லாமல், பல்வேறு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
இதனால், இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் பாதுகாப்பான மாற்று தீர்வுகளாக ஆராயப்படுகின்றன. இந்நிலையில், கிரீன் டீ போன்ற இயற்கை உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்தில் எத்தகைய நன்மைகளை தருகின்றன என்பது பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.
ஆய்வு நடத்தப்பட்டது எப்படி?
இந்த ஆய்வை பிரேசிலின் சாவோ பாலோ பல்கலைக்கழக பேராசிரியர் ரோஸ்மேரி ஓட்டன் தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு மேற்கொண்டது. 15 ஆண்டுகளாக கிரீன் டீயின் ஆரோக்கிய பலன்களை ஆராய்ந்து வரும் இந்தக் குழு, குறிப்பாக எலிகளை மையமாகக் கொண்டு இந்த பரிசோதனையை மேற்கொண்டது.
ஆய்வில், பருமனாக மாற்றப்பட்ட எலிகளுக்கு கிரீன் டீ சாறு கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில், மெலிந்த எலிகளுக்கும் அதே அளவு சாறு கொடுக்கப்பட்டது. சுமார் 12 வாரங்களுக்குப் பிறகு, கிரீன் டீ சாறு கொடுக்கப்பட்ட பருமனான எலிகள் உடல் எடையில் 30% வரை குறைவை காண முடிந்தது. அதோடு, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு சீராகி, இன்சுலின் எதிர்ப்பும் குறைந்தது.
எடை குறைவு: பருமனான எலிகளில் 30% வரை எடை குறைப்பை காண முடிந்தது.
இன்சுலின் உணர்திறன்: குளுக்கோஸ் கட்டுப்பாடு மேம்பட்டு, இன்சுலின் எதிர்ப்பு குறைந்தது.
தசை பாதுகாப்பு: எலிகளில் தசைச் சிதைவு தடுக்கப்பட்டது.
உடல் கொழுப்பு குறைவு: அதிகப்படியான கொழுப்பு எரிபொருளாக மாற்றப்பட்டு உடல் எடை குறைந்தது.
பாதுகாப்பானது: அதே நேரத்தில் மெலிந்த எலிகளில் இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இதுபற்றி பேராசிரியர் ரோஸ்மேரி ஓட்டன் கூறுகையில், “நாங்கள் அளித்த கிரீன் டீ சாறு, மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் மூன்று கப் கிரீன் டீ குடிப்பதற்குச் சமமானது. இதன்மூலம், எங்களது ஆய்வு முடிவுகள் கிரீன் டீ, பருமனானவர்களின் உடல் எடையையும், வளர்சிதை மாற்ற குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. ஆனால், மனிதர்களில் இதன் தாக்கத்தை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சிகள் அவசியம்” என்று அவர் கூறினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1