பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம்- இந்திய அணிக்கு அறிவுறுத்திய பிசிசிஐ?

2 ஐப்பசி 2025 வியாழன் 11:36 | பார்வைகள் : 116
மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய வீராங்கனைகள், பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் 13வது மகளிர் உலகக்கிண்ணத் தொடர் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 5ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என இந்திய அணியினருக்கு பிசிசிஐ அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கிரிக்கெட்டின் அனைத்து விதிமுறைகள் இந்தப் போட்டியின்போது முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும், கை குலுக்குதல் அல்லது வீராங்கனைகள் இயல்பாக பேசிக்கொள்வது போன்ற விடயங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசியக் கிண்ணத்தொடரில் இந்திய ஆடவர் அணியினர் கை குலுக்குவதை தவிர்த்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1