இலங்கையில் பாகிஸ்தான் பிரஜையை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்!

1 ஐப்பசி 2025 புதன் 18:21 | பார்வைகள் : 230
பிணை நிபந்தனைகளை மீறிய பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கைதுசெய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 111 கிலோ 82 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 17 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் காணப்பட்டார். இந்த பாகிஸ்தான் பிரஜை மேன்முறையீட்டு நீதிமன்றினால் கடந்த ஜூலை மாதம் 04 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பிணை நிபந்தனைப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் பிரஜைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் பாகிஸ்தான் பிரஜை பிணை நிபந்தனைகளை மீறி தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் இந்த பாகிஸ்தான் பிரஜையை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்களிடம் உதவி கோரி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பாகிஸ்தான் பிரஜையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 071 – 8591881 அல்லது 011 - 2343333 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1