Paristamil Navigation Paristamil advert login

ஆசிய கோப்பையை இந்தியாவிடம் தர 72 மணி நேர கெடு - அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் பிசிசிஐ

ஆசிய கோப்பையை இந்தியாவிடம் தர 72 மணி நேர கெடு - அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் பிசிசிஐ

1 ஐப்பசி 2025 புதன் 12:30 | பார்வைகள் : 152


ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு தராத நிலையில், பிசிசிஐ அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.

2025 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆனால், கோப்பையை ACC தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து பெற மாட்டேன் என இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் உறுதியாக இருந்தார்.


அதேபோல், கோப்பையை நான் தான் வழங்குவேன் என நக்வியும் உறுதியாக இருந்ததால், கோப்பை இல்லாமலே இந்திய அணி வெற்றியை கொண்டாடியது.

கோப்பையை தன்னுடன் எடுத்து சென்ற நக்விக்கு, பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, மீண்டும் ஒரு விழா நடத்தினால் அதில் கோப்பையை வழங்க தயார் என நக்வி நிபந்தனை விதித்திருந்தார்.

இந்நிலையில், கோப்பையை இந்திய அணியிடம் வழங்க பிசிசிஐ 72 மணி நேரம் கெடு விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அவ்வாறு கோப்பையை வழங்காமல் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல முயற்சித்தால், துபாய் காவல்துறையில் கோப்பையை திருடி செல்வதாக புகார் அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்