பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது

1 ஐப்பசி 2025 புதன் 07:29 | பார்வைகள் : 1691
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து ஜோதிட நிலையம் நடாத்தி வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் , இந்தியாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று வாடகை வீட்டில் குடியமர்ந்த ஜோதிட நிலையம் நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டிற்கு நேற்று சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் மூவரும் கணவன் - மனைவி மற்றும் பிள்ளை எனவும் அவர்கள் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து , பருத்தித்துறை பகுதிக்கு சென்று விடுதி ஒன்றில் தங்கி ஜோதிடம் கூறி வந்த நிலையில் , அண்மையில் தும்பளை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு பெற்று , அங்கு குடியமர்ந்து வீட்டினை ஜோதிட நிலையமாக மாற்றி ஜோதிடம் கூறி வந்துள்ளமை விசாரணைகளில் மேலும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1