இலங்கைக்கு எதிராக களமிறங்கும் மிரட்டல் வீரர்-ஐசிசி தடைக்கு பின் வரவேற்கும் அணி

27 ஆவணி 2025 புதன் 06:46 | பார்வைகள் : 633
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஜிம்பாப்பே அணியில் பிரெண்டன் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 29ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கான ஜிம்பாப்பே அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் அனுபவ வீரர் பிரெண்டன் டெய்லர் (Brendan Taylor) இடம்பிடித்துள்ளார். முன்னதாக ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக டெய்லர் தடைவிதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜிம்பாப்பே தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் David Mutendera கூறுகையில், "பிரெண்டன் டெய்லரின் அனுபவமும் தரமும் விலைமதிப்பற்றவை. குறிப்பாக அழுத்த சூழ்நிலைகளில் அவரது இருப்பு சந்தேகத்திற்கு இடமின்றி அணியை உயர்த்தும்" என தெரிவித்தார்.
39 வயதாகும் பிரெண்டன் டெய்லர் 205 ஒருநாள் போட்டிகளில் 6,684 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 11 சதங்கள், 39 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1