Paristamil Navigation Paristamil advert login

விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை..

விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை..

26 ஆவணி 2025 செவ்வாய் 18:00 | பார்வைகள் : 698


விநாயகர் சதுர்த்தி அன்று பிடி கொழுக்கட்டை படையலுக்கு வைப்பது வழக்கம். எனவே அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1 கப்
ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை :
வெல்லத்தை தண்ணீர் ஊற்று உருக்கிக் கொள்ளுங்கள். பின் அதை வடிகட்டி மீண்டும் கடாயில் ஊற்றி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பின் தேங்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அரிசி மாவை கலந்து கட்டிகளின்றி கலந்துகொள்ளுங்கள்.

தண்ணீர் இறுகி கெட்டிப் பதத்தில் மாவு வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

மாவை சற்று காற்றாட விட்டு கைகளால் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து நீள வாக்கில் பிடித்து பிடித்து வையுங்கள். அதை தற்போது இட்லி குக்கர் தட்டில் வைத்து வேக வையுங்கள். 15 நிமிடங்கள் போதும் வெந்துவிடும். அவ்வளவுதான் பிடி கொழுக்கட்டை தயார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்