100 மீட்டர் சிக்ஸர் அடித்தால் 12 ஓட்டங்கள் வழங்க வேண்டும் - கெவின் பீட்டர்சன் கோரிக்கை

26 ஆவணி 2025 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 1354
100 மீட்டர் சிக்ஸர் அடித்தால் 12 ஓட்டங்கள் வழங்க வேண்டும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கோரிக்கை வைத்துள்ளார்.
கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுவது உண்டு. சமீபத்தில், Bunny Hop கேட்ச் விதிகளில் மாற்றம், 2 பந்து விதிகள் கொண்டு வரப்பட்டது.
இதே போல் சிக்ஸரில் புதிய விதி மாற்றம் கொண்டு வரவேண்டுமென இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் முன்னதாகவே சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். கிரிக்கெட்டில் ஒரு துடுப்பாட்ட வீரர் 100 மீட்டருக்கு அதிகமாக சிக்ஸர் அடித்தால் 12 ஓட்டங்கள் வழங்க வேண்டும்.
இதனால், அதிக வீரர்கள் முயற்சிப்பார்கள். அதிக வீரர்கள் முயற்சித்தால் அதிக பொழுதுபோக்கு கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு தென் அப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் வீரர் சாகித் அஃபிரிடி 153 மீட்டருக்கு அடித்த சிக்ஸரே கிரிக்கெட்டின் நீண்ட சிக்ஸராக உள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1