இரட்டை கோல் அடித்த சம்பவம் செய்த எம்பாப்பே!

25 ஆவணி 2025 திங்கள் 15:40 | பார்வைகள் : 1973
ரியல் மாட்ரிட் அணி லா லிகா போட்டியில் 3-0 என்ற கணக்கில் ரியல் ஓவியடோவை வீழ்த்தியது.
ஸ்பெயினின் Carlos Tartiere மைதானத்தில் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் ரியல் ஓவியடோ அணிகள் மோதின.
ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் மாட்ரிட் வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) துல்லியமாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியின் 83வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் அழகாக கடத்திய பந்தை, எம்பாப்பே கோலாக மாற்றி மிரட்டினார்.
பின்னர் வினிசியஸ் ஜூனியர் (Vinicius Junior) 90+3வது நிமிடத்தில் கோல் அடிக்க, ரியல் மாட்ரிட் (Real Madrid) அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1