மனிதர்களுக்கு பதிலாக 75 எலிகளை விண்வெளிக்கு அனுப்பிய ரஷ்யா

24 ஆவணி 2025 ஞாயிறு 13:01 | பார்வைகள் : 862
ரஷ்யா மனிதர்களுக்கு பதிலாக 75 எலிகளை ஆய்வுக்காக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
ரஷ்யாவின் Bion-M No.2 என்ற விண்கலம் ஆகத்து 20ஆம் திகதி 75 எலிகள், 1000 பழ ஈக்கள் மற்றும் பிற உயிரியல் மாதிரிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
இவை பூமியின் சுற்றுப்பாதையில் கதிர்வீச்சின் தாக்கம் குறித்த தரவுகளை சேகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியின் கடுமையான சூழலை உயிரினங்கள் எப்படிப் பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்யவே இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த எலிகள் அனுப்பப்பட்டுள்ள சிறிய "மவுஸ் ஹொட்டலில்" அனைத்து வசதிகளுடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த 75 எலிகளின் பயணம், மனிதர்கள் விண்வெளிக்கு பாதுகாப்பாக பயணம் செய்ய முடியுமா என்ற முக்கிய கேள்விக்கு விடை தேடும் முயற்சி என்று கூறப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1