46 வயதில் எந்த கேப்டனும் செய்யாத வரலாற்று சாதனை
24 ஆவணி 2025 ஞாயிறு 12:01 | பார்வைகள் : 1774
தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் CPL தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.
ஆன்டிகுவாவில் நடந்த CPL 2025 தொடர் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ், ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய கயானா அணி 211 ஓட்டங்கள் குவித்தது. ஷாய் ஹோப் 82 (54) ஓட்டங்களும், ஹெட்மையர் 65 (26) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஃபால்கன்ஸ் 128 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கரிமா கோர் 31 (14) ஓட்டங்கள் எடுத்தார். கயானா வீரர் இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிகா) 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் டி20யில் அதிக விக்கெட்டுகளை ஒரு போட்டியில் வீழ்த்திய வயதான கேப்டன் என்ற வரலாற்று சாதனையை இம்ரான் தாஹிர் (Imran Tahir) படைத்தார்.
தாஹிர் தனது 46 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் கேப்டனாக மோவ்ஸ்சம் அலி பைஹ் (மலாவி) 39 வயதில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
அதே சமயம் பந்துவீச்சாளராக அதிக வயதில் (46 வயது 299 நாட்கள்) 19 ஓட்டங்களே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டொமகனுடே ரிடவா முதலிடத்தில் உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan