அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த இந்திய வீரர் புஜாரா

24 ஆவணி 2025 ஞாயிறு 12:01 | பார்வைகள் : 1762
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சேதேஷ்வர் புஜாரா, 2010 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 19 சதம், 35 அரைசதம் உட்பட 7,195 ஓட்டங்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப், சென்னை ஆகிய ஐபிஎல் அணிகளுக்காக புஜாரா விளையாடியுள்ளார்.
35 வயதான புஜாராவிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஆவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியே, அவர் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியாக இருந்தது.
இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1