Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவில் முதல் அலுவலகத்தை திறக்கும் OpenAI - மலிவு விலையுடன் புதிய சந்தா திட்டம்!

இந்தியாவில் முதல் அலுவலகத்தை திறக்கும் OpenAI - மலிவு விலையுடன் புதிய சந்தா திட்டம்!

23 ஆவணி 2025 சனி 13:49 | பார்வைகள் : 2361


பிரபல OpenAI நிறுவனம் இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை இந்தியாவில் திறக்க உள்ளது.

OpenAI, Gemini போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை இந்தியர்கள் வியக்கத்தக்க வகையில் தங்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.இந்திய ஆடைகள்

 

சமீபத்தில் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்த தகவலில், OpenAI ChatGPT-ஐ பயன்படுத்தும் இந்திய பயனர்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளனர்.

 

இதன் மூலம் உலக அளவில் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய சந்தையாகவும் மாறியுள்ளது.

 

மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ள இந்தியாவை மையப்படுத்தி சமீபத்தில் OpenAI நிறுவனம் $4.60 அமெரிக்க டொலர் என்ற மலிவான மாதாந்திர சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த விலை குறைப்பு திட்டம் கிட்டத்தட்ட 1 பில்லியனுக்கு அதிகமான இணைய பயனர்களை கவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் OpenAI நிறுவனம் இந்திய தலைநகர் டெல்லியில் தனது முதல் அலுவலகத்தை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் X தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்