Paristamil Navigation Paristamil advert login

உளுந்து களி

 உளுந்து களி

23 ஆவணி 2025 சனி 07:20 | பார்வைகள் : 700


நம் தமிழரின் பாரம்பரிய சமையலில், உடலுக்கு வலிமையும், எலும்புகளுக்கு திடப்பையும் வழங்கும் சிறப்பு உணவாக விளங்குவது உளுந்து களி. கிராமங்களில் திருமணத்திற்கு முன்பும், பிரசவத்திற்கு பின் பெண்களுக்கும், உடல் பலம் பெற இந்த களி பரிமாறப்படும் பழக்கம் இன்னும் தொடர்கிறது.

முதலில் 1 கப் கருப்பு உளுந்தை நன்கு கழுவி, காயவைத்து, வறுத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்தது, ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு கருப்பட்டி சேர்த்து கரையவைத்து வடிகட்டவும்.

இந்த கருப்பட்டி நீரில் உளுந்து மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கட்டியாகாமல் மிதமான சூட்டில் கிளறி விடவும்.சிறிது நெய் சேர்த்து, பிசுபிசுப்பான நிலைக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும், சுவையான உளுந்து களி தயார்

உளுந்து, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது. இது எலும்புகளை வலுப்படுத்துவதோடு, உடல் உஷ்ணத்தையும் சமநிலைப்படுத்தும். கருப்பட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்தி, சக்தியை அதிகரிக்கும்.

இதோ, நம் பாட்டி சமையலறையில் இருந்து வந்த இந்த உளுந்து களி, இன்றும் நம் வாழ்வில் ஆரோக்கியத்தையும் பாரம்பரியத்தையும் காக்கும் ஓர் அற்புதமாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்