புற்றுநோய் தொடர்பான அதிர்ச்சி தகவல் !
23 ஆவணி 2025 சனி 06:20 | பார்வைகள் : 2155
உலகளவில் மூன்றாவது அதிகம் காணப்படும் புற்றுநோயாக அறியப்படும் பெருங்குடல் புற்றுநோயானது, வைட்டமின் டி-ஐ போதுமான அளவில் கொண்டவர்களில் குறைவான ஆபத்தை கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
உலகளவில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோய் (Colorectal Cancer - CRC), பற்றிய முக்கிய தகவல்களை சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருப்பவர்கள், இந்த புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 60% வரை குறைக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, பெருங்குடல் புற்றுநோய் உலகளவில் மூன்றாவது அதிகம் காணப்படும் புற்றுநோயாகவும், புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கான இரண்டாவது முக்கிய காரணமாகவும் உள்ளது. ஆண்களில் இரண்டாவது, பெண்களில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாக இது பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமே, தோல் புற்றுநோய்களைத் தவிர்த்து, பெருங்குடல் புற்றுநோய் ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவரையும் பாதித்துள்ள மூன்றாவது புற்றுநோயாக இடம் பிடித்துள்ளது.
நடிகையின் பாத்ரூமில் கட்டுக்கட்டாக கிடைத்த பல கோடி ரூபாய்... தப்பிக்க சொன்ன ஒரு பொய் - ஒரே இரவில் தலைகீழாக மாறிய வாழ்க்கை!
திருமணத்தை மீறிய உறவு.. பெண்ணின் உடலை 7 துண்டுகளாக வெட்டி கொடூர கொலை.. விசாரணையில் அதிர்ச்சி!
விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படம் ரீ ரிலீஸ்... படத்தைப் பார்த்து தேம்பி தேம்பி அழுத பிரேமலதா!
வைட்டமின் டி அதிகம் உள்ளவர்கள் (80 ng/mL): புற்றுநோய் அபாயம் 25% வரை குறைவு
வைட்டமின் டி குறைவானவர்கள் (10 ng/mL): அதிக ஆபத்து
செவிலியர் சுகாதார ஆய்வில்: வைட்டமின் டி அளவு அதிகம் உள்ள பெண்களுக்கு 58% குறைவான அபாயம்
- நரம்பு செல்கள் தொடர்பு கொள்ள உதவுகிறது
- இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
- குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
- சுவாச நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது
- கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சியை தடுக்கிறது
- புதிய இரத்த நாளங்கள் உருவாவதை தடுக்கிறது
- அசாதாரண செல்களின் இயற்கையான மரணத்தை ஊக்குவிக்கிறது
ஆய்வுகள் வைட்டமின் டி-யின் நன்மைகளை உறுதிப்படுத்தினாலும், அதற்குப் பின்னால் உள்ள உயிரியல் செயல்முறைகள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. எனவே, பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகள் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் இரத்த பரிசோதனை செய்து உடலில் உள்ள வைட்டமின் டி அளவை அறியவும்குறைபாடு இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளவும்குணப்படுத்துவதை விட, தடுப்பு சிகிச்சை சிறந்தது” - எனவே சுயமாகவும், அதிகமாகவும் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும்
வயது முதிர்வு உடற்பயிற்சி குறைவு உடல் பருமன் நார்ச்சத்து குறைந்த உணவு பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகம் உள்ள உணவு இவையும் பெருங்குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.
எனவே, இதன் மூலம் வைட்டமின் டி என்பது எலும்புகளுக்காக மட்டுமல்ல, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் முக்கிய ஊட்டச்சத்தும் ஆகும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, சரியான அளவில் வைட்டமின் டி, சீரான உணவு, உடற்பயிற்சி ஆகியவை சேர்ந்து, பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய அங்கம் வகிக்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan