Paristamil Navigation Paristamil advert login

சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

23 ஆவணி 2025 சனி 05:00 | பார்வைகள் : 587


சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. சென்னையின் 386 ஆவது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சிங்காரச் சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் அனைவருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சென்னை தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,

மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386. சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்