முகவரி இல்லாத கடிதத்துக்கு பதில் போடலாமா: விஜய் பேச்சு குறித்து கமல் பதில்

22 ஆவணி 2025 வெள்ளி 11:45 | பார்வைகள் : 1386
முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா,'' என மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு ராஜ்யசபா எம்பி கமல் பதிலளித்தார்.
மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், '' வரும் சட்டசபை தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி இருக்கும். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன்,'' எனத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய மநீம தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான கமல் கூறியதாவது: என்ன கருத்து சொல்வது. எனதுபெயரை சொல்லியுள்ளாரா? யார் பெயரையாவது சொல்லியுள்ளாரா? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா? அவர் எனது தம்பி, என்றார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1