Paristamil Navigation Paristamil advert login

TVS அறிமுகப்படுத்தவுள்ள புதிய iCube Hybrid ஸ்கூட்டர்

TVS அறிமுகப்படுத்தவுள்ள புதிய iCube Hybrid ஸ்கூட்டர்

21 ஆவணி 2025 வியாழன் 19:10 | பார்வைகள் : 671


TVS Motor நிறுவனம் இந்தியாவின் நகர்ப்புற போக்குவரத்து தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் புதிய iCube Hybrid 2025 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மின்சாரம் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களையும் இணைக்கும் ஹைபிரிட் மொடலாகும்.

இதில் 110CC பெட்ரோல் என்ஜினும், 4.4kW மின்மோட்டாரும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0-40 கி.மீ. வேகத்தை 4.2 வினாடிகளில் அடையும் திறன் கொண்டதாக இருக்குமென கூறப்படுகிறது.

TVS iCube Hybrid ஸ்கூட்டரில், சிக்கனமான பயணத்திற்கு Hybrid Economy மற்றும் அதிக செயல்திறன் கொண்ட பயணத்திற்கு Hybrid Power என இரண்டு Riding Modes கொடுக்கப்பட்டுள்ளன.

Regenrative Braking அமைப்பின் மூலம் பேட்டரி தானாகவே சார்ஜ் ஆகுமாம்.

இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 1 மணிநேரம் ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்