ரொனால்டோ கோல் அடிக்காமலேயே மிரட்டல் வெற்றி! இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அல்-நஸர்
20 ஆவணி 2025 புதன் 09:57 | பார்வைகள் : 1384
சவுதி சூப்பர் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் அல்-நஸர் அணி 2-1 என்ற கணக்கில் அல்-இத்திகாத் அணியை வீழ்த்தியது.
ஹாங் காங் மைதானத்தில் நடந்த அரையிறுதிப்போட்டியில் அல்-நஸர் மற்றும் அல்-இத்திகாத் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அல்-நஸர் வீரர் சாடியோ மானே (Sadio Mane) கோல் அடித்தார்.
அடுத்த 6 நிமிடங்களில் அல்-இத்திகாத் வீரர் ஸ்டீவன் பேர்ஃஜ்விஜின் (Steven Bergwijn) பதிலடி கோல் அடித்தார்.
25வது நிமிடத்தில் கோல் அடித்த சாடியோ மானே தவறிழைத்ததற்காக சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
எனினும் 61வது நிமிடத்தில் ஜோவோ ஃபெலிப்ஸ் (Joao Felix) கோல் அடிக்க, அல்-நஸர் (Al-Nassr) அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் அல்-நஸர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி, 23ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் அல்-நஸருடன் மோதும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan