Paristamil Navigation Paristamil advert login

ஷ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வாலை ஏன் அணியில் சேர்க்கவில்லை - அகர்கர் விளக்கம்

ஷ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வாலை ஏன் அணியில் சேர்க்கவில்லை - அகர்கர் விளக்கம்

19 ஆவணி 2025 செவ்வாய் 19:06 | பார்வைகள் : 803


ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் மற்றும் ஜெய்ஸ்வாலை சேர்க்காதது குறித்து அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.

2025 ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 27 வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது.

இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது.

இதில் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத உள்ளது.

இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சூர்யா குமார் யாதவ் அணித்தலைவராகவும், சுப்மன் கில் துணை அணித்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜிதேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய 2 விக்கெட் கீப்பர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும், தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் சிங், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஐபிஎல் தொடர் மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கமளித்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படாதது துரதிர்ஷ்டவசமானது. 

அணியில் இடம் காலியாகும் போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

அபிஷேக் சர்மா நன்றாக துடுப்பாட்டம் ஆடி வருவதோடு, சிறப்பாக பந்து வீசி வருவதால் அவரை தேர்வு செய்தோம். இருவரில் ஒருவருக்குதான் வாய்ப்பு வழங்க முடியும்.

ஷ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை, யாருக்கு பதிலாக அவரை சேர்க்கலாம் என நீங்கள் அனைவரும் கூறலாம். 15 பேரை தான் அணியில் சேர்க்க முடியும். 

அவர் மீதும் தவறு இல்லை. எங்கள் மீதும் தவறு இல்லை. அவர் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்