கிளிநொச்சியில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு
16 புரட்டாசி 2025 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 1472
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2009 ஆண்டு முதல் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன.
அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 07 ஏக்கர் காணி கடந்த (07-09-2025) அன்று விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணி தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இதே போன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முட்கொம்பன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இயக்கச்சி பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான எட்டுப் பேரின் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan