சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் AI Saree - ஆபத்தை எச்சரிக்கும் நிபுணர்கள்
16 புரட்டாசி 2025 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 945
சமூக வலைத்தளங்களில் தற்போது AI Saree வைரலாகி வரும் நிலையில் அதில் ஆபத்துகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Google Geminiயின் Nano Banana AI தொழில்நுட்பம் தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து விரும்பும் ஆடைக்கு மாற்றி தர வேண்டும் என கேட்டால் விதவிதமான உருவங்களை வழங்குகிறது.
இந்நிலையில், தற்போது AI Saree வைரலாகி வரும் நிலையில் அதில் ஏராளமான பெண்கள் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு விரும்பும் வகையில் மாற்றி வருகின்றனர்.
அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்கால் முழுவதும் ஆக்கிரமித்து வருகின்றன.
இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள், Morphing உள்ளிட்ட தவறான செயல்களுக்கு பிறரால் பயன்படுத்தப்படலாம் என எச்சரித்துள்ளனர்.
எனவே, நிபுணர்கள் புகைப்படங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
உணர்திறன் மிக்க புகைப்படங்களை பதிவேற்றம் செய்யாமல் தவிர்ப்பது, Location tagகளை turn off செய்து வைப்பது உள்ளிட்டவற்றை பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகைபடங்களை யாருக்கெல்லாம் பகிர வேண்டும் என்பதில் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan