குறைந்த விலையில் உணவு டெலிவரி - புதிய Toing செயலியை வெளியிட்ட ஸ்விக்கி
15 புரட்டாசி 2025 திங்கள் 19:48 | பார்வைகள் : 818
குறைந்த விலை உணவுகளுக்காக Toing என்ற செயலியை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் சந்தை மதிப்பு தற்போது 48.07 பில்லியன் டொலர் உள்ளதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 2.7 பில்லியன் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், உணவகங்களில்நேரில் சென்றும் வாங்கும் விலையை விட, உணவு டெலிவரி செயலிகளின் மூலம் வாங்கப்படும் உணவுகளின் மிக அதிகமாக உள்ளது.
டெலிவரி கட்டணம், செயலி கட்டணம், பேக்கேஜிங் கட்டணம், GST வரிகள் என பல்வேறு கூடுதல் கட்டணங்கள் இதற்கு காரணமாக உள்ளது.
இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நடுத்தர வர்க்கத்தினர் இதனை பயன்படுத்த தயங்குகின்றனர்.
இந்நிலையில், அவர்களும் குறைந்த விலையில் உணவுகளை பெறுவதற்காக Toing என்ற புதிய செயலியை ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த செயலியில், 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உள்ள உணவுகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சோதனை அடிப்படையில், முதற்கட்டமாக புனேவில் இந்த சேவையை வழங்குகிறது. வரும் காலத்தில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
குறைந்த விலை உணவுகளுக்காக, Rapido வெளியிட்ட Ownly செயலிக்கு போட்டியாக, Toing செயலியை Swiggy அறிமுகப்படுத்தியுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan