பாகிஸ்தானுடன் கை குலுக்க மறுத்த இந்திய வீரர்கள் - யாரிடமிருந்து வந்த உத்தரவு?
15 புரட்டாசி 2025 திங்கள் 12:25 | பார்வைகள் : 2535
பாகிஸ்தாம் வீரர்களுடன், இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்ததற்கு பின்னணியில் இருந்து உத்தரவே காரணமாக கூறப்படுகிறது.
2025 ஆசிய கோப்பையின் 14.09.2025 நேற்றைய 6வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
வழக்கமாக நாணய சுழற்சியின் போதும்,.போட்டி முடிவடைந்த பின்னரும், இரு அணி வீரர்களும் கை குலுக்கி கொள்வது வழக்கம்.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியின் போதும் இரு அணித்தலைவர்களும் நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தனர்.
அதே போல் போட்டி முடிவடைந்த பின்னரும் சூர்யா குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காமல் ஓய்வறைக்கு சென்று விட்டனர்.
பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், கை குலுக்குவதற்காக இந்திய வீரர்களின் ஓய்வறைக்கு சென்ற போதும், இந்திய வீரர்கள் வெளியே வர மறுத்து விட்டனர்.
இந்த விவகாரம், கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி (Moshin Naqvi), இந்தியா வீரர்கள் கை குலுக்காதது தொடர்பாக விளையாட்டில் அறம் தவறுகிறது என விமர்சித்துள்ளார்.
இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்ததற்கு, பிசிசிஐ உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த உத்தரவே காரணம் என கூறப்படுகிறது. அந்த உத்தரவையே சூர்யா குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பின்பற்றியதாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பகல்ஹாம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்திய அரசியல் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது பன்னாட்டு தொடர் என்பதாலே பாகிஸ்தானுடன் விளையாடுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan