‘கார்மேனி செல்வம்’ படத்தின் கதை இதுவா ?
12 புரட்டாசி 2025 வெள்ளி 19:29 | பார்வைகள் : 2646
பாத்வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்து, ராம் சக்ரி இயக்கியுள்ள படம் ‘கார்மேனி செல்வம்’. இதில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் 17ம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.
சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமவுலியும், கவுதம் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடித்துள்ளனர். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கான இசையை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் நிறுவனம் அமைத்துள்ளது.
படம் குறித்து இயக்குனர் ராம் சக்ரி கூறியிருப்பதாவது: “சென்டிமென்ட், எமோஷன் கலந்த பேமிலி கதை இது. நிம்மதியும் அமைதியும் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்த சமுத்திரக்கனிக்கு திடீரென பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. அப்போது அவருக்குத் தோன்றும் அனுபவங்கள், பிரச்சினைகள்தான் படத்தின் திரைக்கதை. இங்கு வாழ்வதை விடவும் பிழைப்பதற்காக ஓடும் ஓட்டம் பற்றி சொல்லும் படம் இது. இரண்டு விதமான மக்கள் தான் இங்கே இருக்கிறார்கள் – ஒன்று கடனாளிகள், மற்றொன்று நோயாளிகள். அந்தக் கடனை அடைக்கும்போது அவர்கள் நோயாளியாக மாறும் வாய்ப்பு அதிகம். இப்படிப்பட்ட சூழலில் சிக்கிக் கொண்டவர்களின் வாழ்க்கையைப் பற்றித்தான் இந்தப் படம் பேசுகிறது என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan