மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ படக் கூட்டணி…
10 புரட்டாசி 2025 புதன் 18:08 | பார்வைகள் : 2292
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அவரது படங்கள் சமீபகாலமாக எதிர்மறை விமர்சனங்களையும் வணிக ரீதியாக தோல்வியையும் பெற்று வருகின்றன. அதனால் தற்போது மீண்டும் தற்போது படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கியுள்ளார். அவர் நடிப்பில் செப்டம்பர் 19 ஆம் தேதி “சக்தி திருமகன்” திரைப்படம் ரிலீசாகவுள்ளது.
இதையடுத்து தனக்குப் ‘பிச்சைக்காரன்’ என்ற சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் சசி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்துக்கு “நூறுசாமி” என்று டைட்டில் வைக்கபப்ட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan