நள்ளிரவில் மருத்துவமனை சென்ற ரோஹித் சர்மா
10 புரட்டாசி 2025 புதன் 14:47 | பார்வைகள் : 1018
ரோஹித் சர்மா நள்ளிரவில் மருத்துவமனை சென்றது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் ரோஹித் சர்மா நேற்று நள்ளிரவில், மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரோஹித் சர்மா T20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டதால், இன்று தொடங்க உள்ள T20 வடிவிலான ஆசிய கோப்பை தொடரில் அவர் அணியில் இடம்பெறவில்லை.
ரோஹித் ஷர்மாவிற்கு 38 வயதாகிவிட்ட நிலையில், இந்த மருத்துவமனை பயணம் காரணமாக, அக்டோபரில் நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்திற்கு முன்னர் அவர் உடல் தகுதியுடன் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வழக்கமான பரிசோதனை அல்லது அவசர மருத்துவ தேவைக்காக அவர் மருத்துவமனை சென்றிருக்கலாம்.
மருத்துவமனை சென்றதற்கான காரணம் குறித்து, அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
இதன் காரணமாக ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து கவலையடைந்துள்ள ரசிகர்கள், Get well soon rohit என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் பெங்களூருவில், இந்திய வீரர்களின் உதற்தகுதியை சோதனையிட பிசிசிஐ நடத்திய பிராங்கோ சோதனையில் ரோஹித் சர்மா தேர்ச்சி பெற்றார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan