இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

9 புரட்டாசி 2025 செவ்வாய் 13:05 | பார்வைகள் : 489
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் பவுண் ஒன்றிற்கு 5000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 293,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று 5000 ரூபாயால் அதிகரித்து 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (09) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 275,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1